கார்குழல்......!
கார்குழல்......!
"கார் மேகத்தின் கருமை போல்
கருங்கூந்தல் உடைய பெண்ணே
அவிழ்த்து விட்டால்
அருவி போல் கொட்டுதடி
கூந்தலின் ஆறடி நீளம்
அது கண்டு மயங்குதடி
ஆடவரின் சிந்தை
அவ்வாறடிக் கூந்தலில்
மலர்சரம் தொடுத்து
மங்கை நீயும் நடக்க
இவள் இந்திர லோகத்து
ரம்பையோ....
ஊர்வசியோ....
மேனகையோ.....
என எண்ணத் தோனுதடி
பெண்கள் கண்கள் மட்டுமல்ல
ஆணின் கண்களும் அகல மறுக்குதடி.........
மன்னவன் மயக்கத்தில்
மலர்கணை தொடுக்கின்றான்
பெண்ணவள் கூந்தலில் விரல்கோதி
முகம் புதைக்க
பேரின்பம் கூடுதோ....
மன்னவன் ஸ்பரிசத்தால்
பேதையவள் நாணி நிற்க
சிவந்த அவள் மலர்முகத்தில்
சிக்கிய இவன் இதயம்
ஊனமானதோ.....
எங்கும் பறக்கமுடியாமல்
நிலைத்தது அவளில்
வள்ளுவனும் வகுத்தானே
"கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள."
ஐம்புலத்தின் இன்பமும்
அவளுள் அடங்குமென
பரமனும் சோதித்தான்
பரம பக்தன் நக்கீரனை
கூந்தலுக்கு மணமுண்டு என
கூறி வாதாடினான்
நெற்றிக்கண் திறப்பினும்
அவன் கூற்று பொய்யென
கீரன் தமிழோடு எதிராடினான்
இருவரின் வாதத்தில்
தமிழ் மணந்தது.....
இறைவனே இயற்கையில்
வாசனை உண்டு என்ற
பெண்களின் கூந்தல் அழகு
மணமில்லை என்றாலும்
மனதோடு ஒன்றுது.....
மயக்கி மடிதனில் வீழ்த்துது
பாரதிதாசனின் உழத்திப்பாட்டில்
"களை எடுக்கின்றாள் - அதோகட்டழகுடையாள் சிற்றிடையாள் அதோகளை எடுக்கின்றாள்!வளவயல்தனில் மங்கைமாருடன்இளங் கரும்பிடைச் செங்கரும்புபோல்களையெடுக்கின்றாள்!
கவிழ்ந்த தாமரைமுகம் திரும்புமா? - அந்தக்கவிதை ஓவியம்எனை விரும்புமா?
அவிழ்ந்து வீழ்ந்த கருங்கூந்தலாம்அருவி நீரில் எப்போது மூழ்கலாம்".
அவிழ்ந்து வீழ்ந்த கூந்தல் அருவி நீராம்
அதில் எப்பொழுது மூழ்கலாம்
என கேள்விக்கணை தொடுத்தாரே
கவிஞரின் கற்பனை அழகில்
கார்குழல் மகுடம் சூட்டியது......
கார்குழல் என்றும் பெண்மைக்கு இலக்கணம்.....
அதில் கவிழ்ந்து மயங்கி கரம் பிடிப்பதே
ஆண்களின் சொப்பனம்......!
