தந்தையின் அன்பு
தந்தையின் அன்பு
என் சிறந்த ஆசானே!
என் வருகைக்காக காத்திருக்கும் அந்நொடில் இவ்வுலகையே மறந்தாயே!!
ஆனால் என் வருகைக்கு பின் எனக்காக உன்னை இலந்தாயே!!!
எனக்காக கஷ்டத்தையும் இஷ்டமாய்
செய்தாயே!!!
என் புண்ணிகையாக உன் அழுகைக்கூட மறைத்து ..
அனைத்து வேதனையையும் உன்னுள்ள புதைத்தாயே !!!
என்றும் என் நிழல் போல் உடனிருக்கும் நினைக்கும் என் அன்பானவரே!!!!
என் சிரிப்புக்காக உன் தன்மானத்தையும் இழக்க துணிந்தாயே!!!
எனக்காக உன்னை போல் யாராலும் மாறவும் முடியாது, வாழவும் முடியாது.
....
என்றும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அன்பு தந்தையின் அன்பே!!!!
உன் கைகளுள் இருக்கும்வரை என்றும் என் வாழ்கை பேரின்பமே!!!
என் வாழ்க்கை முடியும் வரை ,நான் சாய உன் தோள்கள் தேவையே!!!!!
உன்னுடைய இலக்கு நான் நன்றாக வாழ்வது!!!
ஆனால் என்னுடைய இலட்சியம் உன்னை உயர்த்துவதே!!!
நாம் இருவரும் இவ்வுலகை வெல்லுவோம் ஈசனின் அருளோடு....
தோல்வி என் தொலைவில் கூட இருப்பதில் துணையாக நீ இருக்கையில்....
என்றும் என் வாழ்க்கை நிறைத்திருக்க வேண்டும் உன் அன்பால் தந்தையே!!!
என்றும் என் வாழ்க்கை நிறைந்திருக்க வேண்டும் உன் அன்பால் தந்தையே!!