காதல்
காதல்
என் வானில் அரிதாக தோன்றி....
என் மனதில் மலராக மலர்ந்து ...
என் வாழ்வில் மழையாக பொழிந்து...
என்றும் என் கண் தேடும் என் நாயாகனே...
நிலையில்லாத உலகில் நம் காதல் தொலைந்தாலும்,
எல்லையில்லாத கற்பனை உலகில் என்றும் நம் காதல் ஆழியாத நெடும் பாதை தான்....
பலரின் காதல்
திருமணத்தில் முடிய ....
சிலரின் திருமணம் காதலில் இணையே!!..
ஆனால் என் காதல் உலகறியா உறவே!!
என் காதலை உன்னிடத்தில் காட்ட விருப்பமில்லை....
உன்னுடன் சேர ஆசையில்லை
ஏனெனில் என் காதல் கண்களில் தொடங்கி கனவில் மலர்ந்து ...
என்னுள்ளே முடிகிறது....
என் காதலுக்கு அர்த்தமும் இல்லை இல்லை,அழிவுமில்லை....
அழிக்க அது நிஜமுமில்லை...
அர்த்தங்கள் தர என் வாழ்க்கை அழகிய காவியமில்லை.....
என் வாழ்க்கை மாயை நிறைந்த கற்பனையே!!!!
என் வாழ்க்கை மாயை நிறைந்த கற்பனையே!!!
