மயில் தோகைக் கருங்கூந்தலைக் கொண்ட கருமையான குயில்
மயில் தோகைக் கருங்கூந்தலைக் கொண்ட கருமையான குயில்
பொதிகை மலையின் பசுமைத் தாமரைக் குளத்தில்
தாமரை மலர் படர்ந்திருப்பதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து இருக்கிறேன்!
ஆனால் இன்றோ பொதிகை மலையிலிருந்து காண்கிறேன்!
சூரிய ஒளியினை உமிழும் ஒரு தாமரை மலரினை!
அதிகமான வெய்யிலில் வியர்வையில் நனைந்து தவித்துப் போய் நடந்து வந்தபடி!
இந்த வயல் வெளியில் கதிரவனின் கதிர்கள் வெப்பத்தினை உமிழ்ந்து கொண்டிருக்க!
வேப்பமர நிழலில் வியர்வையில் நனைந்தபடி வருகிறதே! இந்தச் சூரியகாந்தி மலர்!
இது இயற்கை செய்த செயலடா?
சூரியகாந்தி மலரைக் கதிரவன் நெருங்காதே!
அந்தக் கருத்தினால் என் இதயத்தில் வினா எழுப்ப!
சூரியகாந்தி மலரின் அருகில் சென்று காண்கிறேன்!
அமைதியாக அருகில் சென்று கவனிக்கும் பொழுதுதான் தெரிந்தது!
அடடே! இது கருமையான குயில் அல்லவா!
அந்தகருமையான குயில்அமைதியாகக் கதிரவனின் வெப்பத்தினை ரசித்தபடி நின்றிருக்க!
அந்தக் கருமையான குயிலிடம் கேட்கிறேன்! இந்தக் கடும் வெய்யிலினைக் கொண்டு வந்தது உன் செயலா என்று?
இந்தக் கருமையான குயிலிடம் மனம் வேண்டி வந்ததோ! இந்தக் கதிரவனின் அனல் காற்று!
இந்த உடனடிக் கேள்விக்குக் கருமையான குயிலிடம் பதிலில்லை!
அந்தக் கேள்விக்குத் தன் கோவைப் பழ இதழ் புன்னகையால் பதிலளித்தாள்!
அடடா மகிழ்ந்து போனேனே!
தொடர்ச்சியான வெய்யிலுக்கா அழகு!
பாடாத கருமையான குயிலுக்கா அழகு!
சொட்டச் சொட்ட வியர்வையில் அந்தக் கருமையான குயில் நனைவது அதைவிட அழகு!
தொடர்ச்சியான செயலுக்கு நான் யாருக்கு நன்றி சொல்ல! வெய்யிலுக்கா? இயற்கைக்கா?
அடர்த்த மயில் தோகையைப் போன்ற கருங்கூந்தலைக் கொண்ட கருமையான குயிலுக்கா?

