STORYMIRROR

Indhu Dhivya

Inspirational Children

5  

Indhu Dhivya

Inspirational Children

நண்பர்கள் கூட்டம்...

நண்பர்கள் கூட்டம்...

1 min
497

எங்கள் அன்பு கூட்டத்திற்கு என்றும்

          இல்லையே எல்லை கோடு...

என்றும் எங்கள் இளமை கூட்க்குள்

        இருப்பதில்லை பாகுபாடு...


வெற்றி என்றும் எங்களுக்கு நண்பன் பாரு...

நாங்கள் ஓன்றாக இருக்கையில் 

       தோல்வி கூட எங்களை கண்டு

பயந்து ஒடும் பாரு...

ஓற்றுமையால் எங்களுக்கு என்றும் வெற்றியே...

முயற்ச்சி மட்டுமே எங்களின் யுத்தியே!

முயற்ச்சின் பயன் மகிழ்ச்சியே!

எங்கள் மகிழ்ச்சிக்கு தேவையில்லை 

           விலை மதிப்புள்ள பணப் பெட்டியே!!

நண்பர்களுக்குள் சண்டை கூட அழகு தான்...

எனெனில், அது நட்பு ஆழம் பெற 

இறைவன் தரும் பொற்காலம் தான்..

தேவையற்ற பேச்சுக்கள் கூட அழகுதான்

அது என்றும் நண்பர்களிடையில் மறையாத நினைவுதான்...

காதலில் கூட தோல்வி இருக்கும்..

ஆனால் நட்பில் மட்டும் தோல்வியை வெல்ல வழிகள் பிறக்கும்..

தோள் கூட்க நண்பர்கள் இருக்கையில்

     துன்பம் கூட ஓர் விதமான இன்பம்தான்

வாழ்கை முற்கள் நிறைந்த பாதைதான் ,

 அதில் நண்பர்கள் நம் மனக் காயங்களுக்கு ஆறுதல் தரும் இன்னிசை கீதைதான்..


நண்பர்களிடையே பிரிவு கூட அழகுதான்..

அது நட்பை ,தனிமையில் நினைத்து மகிழ, வாழ்கை தரும் அழகான சுவைதான்...

வருடங்கள் கடந்தும் மறவாத குரல்கள்,

நண்பரின் குரல்களே!

என்றும் நம் மனதில் இருந்து அழியாது 

நண்பரின் நினைவுகளே!


    


 



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational