தீராக் காதல் !
தீராக் காதல் !
வான் அரங்கில்
உலா வருகிறாள்
நிலா வனிதையவள் !
மேகத் திரை விலக்கி
மெல்லவே எட்டிப் பார்க்கையில்
அவள்தம் எழில் வதனம்
நீர்க் கண்ணாடியில் பட்டு
ஜொலித்துக் கொண்டிருக்க
தென்றற் காதலனும் மெல்ல
வனிதையவளை சற்றே
சீண்டித் தான் பார்க்க
கண்ணாடி காட்டிய வதனம்
சற்றே வெட்கத்தில் நாணிட
விருட்டென துள்ளி ஓடியே
பதுங்கிக் கொண்டாள் -
நிலா காதலி !
கண்ணாமூச்சி ஆட்டமும்
சற்றே நீள - அசந்தே தான்
உறங்கிப் போனாள்
நிலா வனிதை !
சற்று நேரத்தில்
உறக்கம் கலைந்தவளாய்
புது ஒப்பனையோடே
உலா வருகிறாள் -
தன் வெள்ளி வதனம் காட்டியே !
ஊடலும் கூடலுமாய்
மீண்டும் மீண்டும்
தெவிட்டாமல் தொடரும்
இந்த தீராக் காதல் !