STORYMIRROR

இரா.பெரியசாமி R PERIYASAMY

Romance Classics Fantasy

5  

இரா.பெரியசாமி R PERIYASAMY

Romance Classics Fantasy

ஓவியமா? காதல் காவியமா?

ஓவியமா? காதல் காவியமா?

1 min
511


இருவருக்கிடையில்

முன்பின் 

அறிமுகம் இருந்தோ

இல்லாமலோ..

இருந்தாலும்...


காதல்...


அன்பாலோ

அழகாலோ 

அறிவாலோ

பரிவாலோ

ஏதோ ஒன்றால்

எதிர்பாலால்

உள்ளுணர்வால்

தன்பால் 

ஈர்க்கப்பட்டு

அவர்பால் 

அளவில்லாமல் 

ஆசை வைத்தால்

அதுவே காதல்..


உள்ளத்தின் 

உணர்வுகளை 

இதமாக

வருடும் போதே..

மனதுக்குள் 

வானவில் 

குடை பிடிக்கும்..

இதயம் தன்னையே

மறந்து போகும்..

தன்னலம் 

எங்கேயோ 

பறந்து போகும்..


காதல்

உயிரை விடவும் 

உயர்வாகி விடுவதால்

காதலுக்காக

உயிரை விடவும்

மனதுக்குள்

வீரம் வரும்...


கொடுப்பதற்கும்

பெறுவதற்கும்

உற்றதோர்

தருணத்தை  

தேடி ஏக்கமுடன் 

காத்திருக்கும்..

கொடுக்கின்ற  

பரிசுகளெல்லாம் 

காதல் முன் 

சிறுத்து போகும்..

பெறுகின்ற 

போது மட்டும்

சின்னஞ்சிறு 

பரிசு கூட

விண்ணளவு

காதல் பேசும்..


இதயத்தில் காதல் 

மொட்டாக 

அரும்பிடும் போதே

வாழ்க்கையின் 

பொருள் 

மெல்ல மெல்ல 

விளங்க வரும்..

வாழ்க்கையில்  

காதல் மட்டுமே 

இனியதொரு  

வரமென்று  

மனதுக்கு 

தெரியவரும்..


உணர்வால் தோன்றிடும்

உன்னதமான காதலுக்கு..

காதலர்களுக்கிடையே 

உருவாகும்

உணர்ச்சிமிகு

தருணங்கள்

கூடுதலாய் 

பலம் சேர்க்கும்..


காதலரில் ஒருவர் 

செத்தே போனாலும்,

காதல் சாவதில்லை..

மாறாக..

காதல் செத்துவிட்டால்

காதலர்கள் வாழ்வதில்லை..


காதல் வாழும் 

வரையிலும் ஓவியம்

காதல் வாழ்ந்து 

முடிந்தபின்னும் காவியம்.



Rate this content
Log in

Similar tamil poem from Romance