STORYMIRROR

Ravivarman Periyasamy

Fantasy

5  

Ravivarman Periyasamy

Fantasy

அடவிப்பயணி

அடவிப்பயணி

1 min
455

பயணிக்கத் துணிந்து விட்ட நேரம்

பாதையெல்லாம் குருதி படிமங்கள்

அதை மழையால் கழுவிக் கொண்டிருந்தது

அந்த பொட்டல் பாதையின் படிகள்

சிட்டுக் குருவியின் சப்தம் மந்தமாகிறது

களிறின் பிளிறல் காதைக் கிழிக்கிறது

கிலி பிடித்த கிளியோ பறந்தது வீட்டிற்கு

உலவும் நிலவும் ஊர் கான வரவில்லை

பகலவனும் பகல் முடித்து போனானே தெரியவிலை

பந்தம் அற்று பந்தத்தோடு பயணம்

தீ பந்தத்தோடு

தீயும் மையும் கொண்டு

தீ மெய்யும் தீமையும் காணும் பயணம்

காடே உறங்கிற்று காட்டாறைத் தவிர

ஆந்தையும் அலறிற்று

ஆகாசம் பூத்து குலுங்கிட

இருட்டில் முகம் மறைத்து காத்திருக்கும் கன்னியைப்போல 

நிலவோ கார் முகிலினுள்ளே

முடிந்த பாதையில் தொடர்ந்த பயணம்

புதிய பாதையோ இருட்டிலே வண்ணம்

தங்கத்தால் மின்னிய குளம் கண்டேன் அங்கு

பொன்னாலும் வைரத்தாலும் பூமி பூத்தது அன்று

அகிலமே அமைதியை இரசித்தபோது

அமைதியும் நானும் அகிலத்தை இரசித்தோமே

பூமியின் அழகினிலே வெட்கித்தான் நிலவும் 

கார் முகிலினுள்ளே தன்னை ஒழித்துத்தான் கொண்டதுவோ

நான் கண்ட இவ்வழகை யார் தான் காணுவாரோ

யார் கண்ட போதும் அது நான் கண்டது போல் ஆகுமோ

இரவில் சிரித்த பூமியைக் கண்டேனே நானும்

அதன் கட்டுக்கடங்கா களிப்பில் உண்டான கண்ணீரில் நனைந்தேனே நானும்

மேகமும் வந்திறங்கி என்னோடு பூமகளின் களிப்பில் நனைந்துதான் போனதுவே

முடியாத பாதையில் முடிந்ததுவே என் பயணமும் ஆனந்தமாய்...



Rate this content
Log in

Similar tamil poem from Fantasy