பெண்களை ஊக்குவிக்கும் இந்தப் புதுமைப் பெண்
பெண்களை ஊக்குவிக்கும் இந்தப் புதுமைப் பெண்
பெண்களுக்கான சர்வதேச இலக்கியங்களைப் புத்தகங்களின் மூலம் கற்றுத் தேர்ந்தவள் இந்தப் புதுமைப் பெண்!
பெண்ணியக் கோட்பாடுகளைக் கற்று உணர்ந்து கொண்டு எளிய மக்களுக்கு ஆதரவாகப் போராடுபவள் இந்தப் புதுமைப் பெண்!
பெண்கல்வியின் அவசியத்தினை எளிய மக்களுக்குத் தீவிரமாக உணர்த்தத் தொடர்ந்து போராடுகின்ற இந்தப் புதுமைப் பெண்!
பெண்கள் தமிழ் மொழியிலும் ஆங்கில மொழியிலும் தனித்துவம் பெற்றுச் சிறந்து வர ஊக்கப் படுத்துபவள் இந்தப் புதுமைப் பெண்!
பெண்களுக்குத் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளை உணர்த்தி சிறந்த தமிழ் இலக்கியங்களைக் கற்பிப்பவள் இந்தப் புதுமைப் பெண்!
பெண்களைச் சீண்டும் சமூக விரோதிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளப் பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சிகளை அளிப்பவள் இந்தப் புதுமைப் பெண்!
பெண்கள் தம் வாழ்வில் யாருக்கும் கையூட்டு கொடுக்கக் கூடாது என்று தொடர்ந்து கற்பிக்கின்றவள் இந்தப் புதுமைப் பெண்!
பெண்களுக்கு அரசாங்கத்தின் மூலம் நடத்தப் படும் சிறு தொழில் பயிற்சி வகுப்புகள்பற்றிய செய்திகளைத் தொடர்ந்து பெண்களுக்குக் கொண்டு சேர்த்து அவர்களை அரசின் தொழில் பயிற்சியில் பங்கு பெற ஊக்கப் படுத்துபவள் இந்தப் புதுமைப் பெண்!
பெண்களின் தற்சார்பு பொருளாதாரத்திற்காகச் சுய தொழில் செய்ய ஊக்கப் படுத்தி அரசு வங்கிகளை முறையாக அணுகத் துணைபுரிகின்றவள் இந்தப் புதுமைப்பெண்!
பெண்களை அடிமை என்னும் கருத்துக் க
ோட்பாடுகளைத் தகர்த்தெரிவதே என் கடமை என்று போராடும் ஆற்றலுடையவள் இந்தப் புதுமைப் பெண்!
பெண்களின் ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் தொடர்ந்து வலியுறுத்துபவள் இந்தப் புதுமைப் பெண்!
பெண்களின் ஆழ்மனதில் உள்ள உயர்வு தாழ்வு எண்ணங்களைக் களைந்து எரிய வந்தவள் இந்தப் புதுமைப் பெண்!
பெண்களின் ஆழ்மனதில் உள்ள சாதி மத வேற்றுமை எண்ணங்களைக் களைந்து எரிய வந்தவள் இந்தப் புதுமைப் பெண்!
பெண்களுக்காகத் தான் புத்தகங்களின் மூலம் கற்ற சமூக நீதிக் கருத்துக்களைத் தொடர்ந்து பெண்களுக்குக் கற்பித்து வருபவள் இந்தப் புதுமைப் பெண்!
பெண்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நிறவெறி எண்ணங்களைத் தகர்த்து எரிய வந்தவள் இந்தப் புதுமைப் பெண்!
பெண்களுக்கு ஏற்படும் சோதனைகளுக்குத் தானே உடன் இருந்து அற வழியில் போராடுகின்றவள் இந்தப் புதுமைப் பெண்!
பெண்கள் தன்மானத்துடன் தனித்துவமாக வாழ வேண்டும் என்று தொடர்ந்து கற்பிக்கின்றவள் இந்தப் புதுமைப் பெண்!
பெண்கள் தமக்கான அரசியல் உரிமைகளைப் பெற வேண்டும் என்று தொடர்ந்து கற்பிக்கின்றவள் இந்தப் புதுமைப் பெண்!
பெண்களுக்கான அரசியல் பாதையில் அவர்களுக்கென்று அரசாங்கத்தில் வழங்கப் பட்டிருக்கும் தனி ஒதுக்கீட்டில் தகுதியான பெண்களை அழைத்து வந்து போட்டியிடச் செய்பவள் இந்தப் புதுமைப் பெண்!
பெண்களைச் சர்வதேச தரத்திற்கு அழைத்துச் செல்லும் பாதுகாப்பு அரணாக விளங்குபவள் இந்தப் புதுமைப் பெண்!