வரத்துடன் வரம் தந்தவரை தேடி
வரத்துடன் வரம் தந்தவரை தேடி
நிமிர்ந்த போது சொக்கி போனான் என்னவன்
கோவில் கோபுரம் பார்த்து அல்ல அதன் முன் நிற்கும் அவன் ரதம் சேலை கட்டியிருப்பதை கண்டு...
அந்த கண்கள் எனக்கு ஆயிரம் சொல்லியது... என் உதடுகள் வெட்கத்தோடு அவனை கண்டு புன்னகைக்க அவன் கன்னம் காய்ந்த மிளகாய் போல அப்படி ஒரு சிவப்பு... சூடேருகிறதே அவன் முகம் காண....
முதல் முறை வேட்டிசட்டையில் அவன் .... அந்த வெண்ணிற ஆடை இந்த வெண்புறாவை மயக்கியது...
எனக்காக மலர்ந்த மலர்கள் கூடையில் கோவில் முன் என்னை அழைக்க என்னவனோ எனக்கு முன்னரே அங்கு சென்றான் பாவம் பொறுப்பு வந்ததோ என எண்ண... எனக்கு வெட்கத்தில் சிரிப்பு தான் வந்தது அவன் கையில் மல்லி மலர்களை கண்டதும்
அவன் அருகே வர என் கூந்தல் அவன் தேகம் வருட அவை விரல் இடுக்குகளில் சிக்கி அவனோடு விளையாட
என் உடல் சிலிர்த்து மயங்கினேன் வலிகள் இன்றி மீண்டும் அவனிடம்
காயா மல்லிகையாக அவன் காதல் மொழியை என்னிடம் ச
ொல்ல என் தலையின் மகுடம் ஆனது...
கொடுத்து வச்சவள் என்றார் பூக்கார பாட்டி " ஆம், என்றோ கொடுத்து விட்டேனே என்னை அவனிடம், இனி என்ன இருக்கு அவன் பொழியும் காதலை தவிர "
அந்த நெருக்கம் தந்த சூடும் உரிமையும்.... என்னை இப்போதே மரணம் அழைத்தாலும் மறுக்க மனம் வராது போல
வேறென்ன வேண்டும் அவன் காதலியாக ❤
கரம் பிடித்து என்னவனுடன் கோவில் படி மிதித்த நொடி
சொர்கத்தின் வாசலில் தேவாதி தேவர்கள் நின்று மலர் தூவி மகிழ்ச்சியுடன் காத்திருந்ததுபோல மனம் கடந்து துடித்தது....
என் பெண்மையே முழுமை அடைந்தது அவன் கரம் என் நுதல் தொட்டு குங்குமம் இட்டு முடித்த அந்த நொடி
என்ன?? நான் நனைந்து விட்டேன் அவனை ரசித்த என் விழிகள் கொடுத்த கண்ணீரால் இவை அனைத்தும் கனா என்றரிந்த நொடி
இப்படிக்கு உன்னவள் என்ற உரிமை நாடும்
உன்னவள் ❤
காதலர் தின பரிசாக 💗