நீந்தும் மீனா விண்மீன்??
நீந்தும் மீனா விண்மீன்??
விழாத ஒளியால் விழுந்த நிழலால்
மறையும் நிழலில் நிலவும்
இரவில் நிலவும் இருளும்
நிகழும் நிழலால் கிரகணம்
பகலில் பகலும் இருளும்
இரவில் நீந்தும் விண்மீன்
இருளால் ஒளிரும் - அம்மீனும்
பகலில் நீந்தும் நிழலில்
இருளால் ஒளிரும் விண்மீன்.
வலையில் விழா மீனாம்
வளையா ஒளி தரும் மீனாம்
பகலவன் மறைந்த பகலில்
வானில் நீந்தும் விண்மீனாம்.
கிரகணம் தந்த நிழலால்
p>
அறியும் மீனின் இடப்பெயர்வு
பகலில் ஒருவிடம் இரவில் மறுவிடம்
தவழும் மீனின் இடப்பெயர்வு
நீந்தும் மீனா விண்மீன்??
சார்பியல் கண்டறிந்த வலையாம்
காலவெளி என்னும் வலையாம் - அது
இடப்பெயர்வை தந்த வலையாம்.
வலையில் விழுந்தது மீனா - இல்லை
வளையா கர்வம் கொண்ட ஒளியாம்.
வலையில் விழுந்தது ஒளி
வளையத் தொடங்கும் ஒளி
காலவெளியின் வலையில்
வளையா ஒளியும் வளையும்.