வான் ஊர்வலம்
வான் ஊர்வலம்


அன்புள்ள நாட்குறிப்பே,
நீலவானுக்கு அணிகலனாய்
வெண்ணிலவை சூடியே
அணி செய்து ஆராதிக்கும்
அன்னையவள் அன்பிலே
ஆனந்தம் அனுபவித்தே
மேகத் தேர் ஏறி கடக்கையில்
நட்சத்திர தூறல்கள்
ஒளிச் சாரல்களை தூவிச் செல்ல
வான வீதியில் அரங்கேறும்
அழகு ஊர்வலம் !