மனம் தளராதே
மனம் தளராதே
அச்சம் எனும் மடமையை
உன்னுள் இருந்து வேரறுத்து
குப்பையில் தூக்கி எறி...
உன் வாழ்வின் இலட்சியத்தை
உன்னுள் மரமாக விதைத்திடு...
தன்னம்பிக்கை எனும் கிளைகளை
நீயாக வளர்த்து கொள்...
உன் அனைத்து ஆசையும்
பூவாய் மலர்ந்து வாசம் தரும்...
முயற்சியை கைவிடாதே...
காயும் ஓர்நாள் கனியாக
மாறி சுவை தருவது போல...
உனக்கும் ஓர்நாள் வெற்றி
கிடைத்து அதில் மகிழ்ச்சியும்
கிடைக்கும் மனம் தளராதே!!!