ஜகனின் சேனா
ஜகனின் சேனா
நெஞ்சுக்கூடின் ஓரத்தில் குடியிருக்கும்
மனமதில் - சிம்மாசனமாய் நீ வீற்றிருக்க...
நான் உன்னை விலக்கவும் முடியாமல்...
உனை விட்டு விலகி போகவும் முடியாமல்...
உன்னால் நொடி பொழுதும் துவண்டு...
உன் மீது வைத்த காதலில் வீழ்ந்து போகிறேனடி...
என் மனதை மயக்கிய மாயவளே...
என் மனதை கொள்ளையடித்த கோலவிழியே...
என் மனதை சூறாவளியாய் தாக்கிய சுந்தரியே...
மன்னவளும் நீயே.....!!!!!!!!
என்னவளும் நீயே.....!!!!!!!!
எனை கொன்றவளும் நீயே.....!!!!!!!
எனை வென்றவளும் நீயே.......!!!!!!!