STORYMIRROR

நிலவின் தோழி கனி

Fantasy Inspirational Others

4  

நிலவின் தோழி கனி

Fantasy Inspirational Others

ஒழுக்கமான கெட்டவள்

ஒழுக்கமான கெட்டவள்

1 min
344

பெண்ணைப் போற்று....

தூற்றாதே....


பெருமை பேசாவிட்டாலும்

அவதூறாக பேசாதே....


பெண்ணுக்கு மதிப்பு கொடு....

இகழ்ச்சி செய்யாதே....


பெண்ணின் மனதை பார்....

உடலை பார்க்காதே....


பெண் என்பவள்....


அரவணைக்க அன்னை பார்வதி தேவியாவும் இருப்பாள்....

பொறுமையின் சின்னம் சீதா தேவியாகவும் இருப்பாள்....


உங்கள் செய்கையின் வீரியம் அதிகரித்தால்....


ஆத்திரம் கொண்டு...

வதம் செய்ய.....

காளி தேவியாகவும் மாறுவாள்....


அனைத்தும் நீ நடக்கும் நடைமுறையை பொறுத்தே.....


ஒரு பெண்ணாய்....

நான் அறிவேன்....

என்னை நானறிவேன்...


யாருக்கும் நான் நல்லவள்

என்று நிருபிக்க வேண்டிய

அவசியம் எனக்கில்லை....


நான் நல்லவளாய் இருப்பதும்....

கெட்டவளாய் இருப்பதும்...

உன் செய்கை சொல்லும்...


நான் பயங்கரமான நல்லவளா....

இல்லாவிட்டால்....

ஒழுக்கமான கெட்டவளான்னு‌....


பெண்களுக்கு

என்னில் அடங்கா பெயர்களை 

எல்லாம் வைக்கும்....

இந்த சமுகம்....



Rate this content
Log in

Similar tamil poem from Fantasy