ஒரு கேள்வி!!!
ஒரு கேள்வி!!!
எத்தனை முறை சொல்வது
என்னை அப்படி அழைக்காதே என்று?
செல்லமே என்று அழைப்பதில்
உனக்கு ஏன் அத்தனை ஆர்வம்?
அதை ஒவ்வொரு முறை மறுப்பதிலும்
எனக்கு ஏன் அத்தனை கோபம்?
சில வார்த்தைகள் சில நேரம்
நமக்குள் கிளரிடும் வலியின்
தாக்கத்தில் நான் துவண்டேன்
என்று சொன்னாலும் புரிந்து
கொள்ள மறுக்கும் உன்னிடத்தில்
செல்லமாய் நான் கோபம் கொண்டாலும்
சிலிர்த்து எழும் சண்டைச் சேவலாய் நீ
அதனால் நான்
மெளனமாய் விலகி நிற்கின்றேன்
திரும்பவும் வருவாய் என்னிடத்தில்
அது வரை நான் காத்திருப்பேன்.