வேங்குழல்
வேங்குழல்


சிரிக்கும் மூங்கில்
அதன் கன்னத்துக் குழிகள்
சிலிர்க்கும் காற்று
அவன் இதழின் நுனியில்
வருடும் விரல்கள்
குளிர் காயும் ஸ்வரங்கள்
வளையும் நுதல்கள்
மிளிர் வானின் பிறைகள்
துளைக்கும் விழிகள்
அந்தப் பிறையில் கறைகள்
துளிர்க்கும் மனதில்
அந்திப் பொழுதின் சுமைகள்
இசையின் மழையில்
கொஞ்சும் தோகை மயில்கள்
கசியும் குழலில்
ஊஞ்சல் ஆடும் இடைகள்!!!