Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chidambaranathan N

Romance Classics Fantasy

4  

Chidambaranathan N

Romance Classics Fantasy

அழகிய கருமையான குயில்

அழகிய கருமையான குயில்

1 min
378


அன்பாக நகைக்கும் அந்தக் கருமையான குயில் அழகு!

சீறும் சினத்தால் முறைக்கும் அந்தக் கருமையான குயில்  அழகு!

அன்பாகத் தேன் ஒழுகப் பேசினாலும் அழகு!

வயல் வெளியில் அருவா தூக்கி பணிபுரிந்தாலும் அழகு!

சேற்றினிலே நீ நின்று நளினமாக நாற்று நட்டாலும் அழகு!

வீட்டின் முன் அழகிய வண்ணக் கோலம் இட்டாலும் பேரழகு!

இறைவனைத் திருக் கோவிலில் வழிபடுவதும் அழகு!

நீ வளர்க்கும் கோழி, சேவல்களை அன்புடன் கொஞ்சுவதும் அழகு!

சிகப்பு நிறத் தாவணி அணிந்து வீதியில் ஒய்யாரமாக நடப்பதும் அழகு!

சிறிது தூரம் சென்று அழகாகத் திரும்பி நகைப்பதும் அழகு!

வீட்டிலே நீ தனியாகச் சமையல் செய்வதும் அழகு!

உணவினை குழந்தைக்கு ஊட்டிவிடுவது அதைவிட அழகு!

அச்சப் படாமல் சிறிய  ஓணானை நீ உன்  கைகளால் பிடித்து எறிவதும் அழகு!

சிறிய கரப்பான்பூச்சிக்குப் பெரியதாகப் பயப்படுவதும் உன் கருவிழியும் அழகு!

நடக்கும்பொழுது நளினமாக மண்ணை பார்த்து நடப்பதும் அழகு!

உன் கல்வியில் விண்ணைத் தொடச் செய்யும் உன் விடாமுயற்சியும் அழகு!

சிரிக்கும்பொழுது வெட்கத்தில் சிவக்கும் உன் கருப்புக் கன்னங்களும் அழகு!

புன்னகைக்கும் கணத்தில் கன்னங்களில் விழும் உன் கருங் கூந்தலைக் கோதுவதும் அழகு.!

நடுங்கும் இரவின் குளிரைப் போல இருக்கும்  உனது கருப்பு நிறத் தோற்றமும் அழகு!

விவசாய வேலை செய்யும்பொழுது வரும் உன் வியர்வை துளியும் அழகு!

நகரப் பேருந்திலே ஒய்யாரமாக நீ அமர்ந்து பயணிப்பதும் அழகு!

பேருந்திலே உன்னைச் சீண்டும் ஆண்களை நீ  வார்தைகளால் வசை மாறிப் பொழிவதும்  அழகு!

உனது மனதிற்குப் பிடித்தவனை நீ யாருக்கும் தெரியாமல் ரசிப்பதும் அழகு!

அழகான காதல் வந்ததும் தனிமையில் அமர்ந்து கனவு காண்பதும் அழகு!

திருமணம் முடிந்ததும் பெற்றோரைப் பிரிந்து வரும் அந்தக் கருமையான குயிலின் கண்ணீர்த் துளிகளும் கூட அழகுதான்!


Rate this content
Log in

Similar tamil poem from Romance