உன் அடையாளம்
உன் அடையாளம்
உனக்கென்று ஓர் அடையாளம்
இவ்வுலகில் கிடைக்க வேண்டுமெனில்...
உன் மனதிற்கு பிடிக்காததை செய்து
மனவருத்தம் அடைவதை காட்டிலும்
உன் மனதிற்கு பிடித்த விஷயத்தை
செய்து அதில் உன் திறமையை
முழுமையாக வளர்த்து கொள்....
அதில் கிடைக்கும் ஒரு திருப்தி
உனக்கு வேறெதிலும் கிடைக்காது...
அதில் தான் உன்னுடைய சுயத்தின்
அடையாளமும் அடங்கி இருக்கிறது...