இயற்கையின் வித்து!
இயற்கையின் வித்து!


உடலுக்கு உயிர் சேர்த்து துடிப்புடன் இயங்கும் இதயம் ஒன்று !
காட்சிகளை ரசித்து பல வேளைகளில் கலங்கும் விழிகள் இரண்டு !
சூரிய குடும்பத்தில் நாம் வாழும் பூமியின் இடம் மூன்று !
ஐயநிலை நீக்கி துல்லியமாக வழிகாட்டும் திசைகள் நான்கு!
உணர்ச்சிகளை உணர மனிதனுக்கு இறைவன் படைத்த புலன்கள் ஐந்து !
உண்டு மகிழ அன்னை பரிமாறும் உணவின் சுவைகள் ஆறு !
மாரிக்கு பின் அழகாய் தோன்றும் வானவில்லின் நிறங்கள் ஏழு!
உலகமே அதிசயித்துப் பார்கும் அதிசயங்கள் எட்டு !
புலன்கள் பேச அழகிய நம் முகத்தில் தோன்றும் பாவனைகள் ஒன்பது !
வேலையை எளிமையாய் முடிக்க உதவும் நம் விரல்கள் பத்து !
இவையனைத்தும் இறைவன் நமக்குத் தந்த சொத்து !அதுவே இயற்கையின் வித்து.......