காதல்
காதல்
உன்னை தூரத்திலிருந்தே நேசிக்கிறேன்,
மறைந்திருந்து ரசிக்கிறேன்,
உந்தன் கண்கள் பேசும் போதெல்லாம்,
என்னை மறந்து விடுக்கின்றேன்,
உந்தன் சின்ன தீண்டலும்,
மெல்லிய தென்றல் பூவினை வருடுவது போன்ற உணர்வினை தருகிறது,
உன்னை நினைக்கும் போதெல்லாம்,
சூரியனை கண்ட தாமரை போல் மலர்கிறேன்,
என்னை காணும் உந்தன் நொடி பொழுது பார்வையும்,
என்னுள் இருக்கும் பெண்மையை ஞாபகப்படுத்தி விடுகிறது...
எந்தன் காதல் உன்னை சேருமா?
காத்திருக்கிறேன், உனக்காக என்றென்றும்....