கண்ணாமூச்சி
கண்ணாமூச்சி


எங்கிருந்தோ திடிரென தோன்றினாய் நீ,
எந்தன் பாதையில் இருந்த எதையும்,
விரும்பாமல் சென்ற என்னிடம்,
ஒரு பூங்கொத்தாய் வழி மறித்தாய்,
உன்னை தவிர்த்து விட்டு செல்ல முயலுகையில்,
தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தாய்,
உன்னை ஏந்துகையில் உண்டான ஸ்பரிசம்,
இன்னும் என்னை புதியதாய் தோன்ற வைத்தது,
அதனாலோ என்னவோ,
மனதினில் ஆழமாய் பதிந்துவிட்டாய்,
இருந்தும் உன்னிடம் சொல்ல ஏனோ,
மனம் மறுக்கிறது,
காரணம் உந்தன் சிறு பிரிவினையும்,
என் மனம் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை,
இன்னும் எத்தனை நாட்கள்,
இந்த கண்ணாமூச்சு தொடரும் என்று,
தெரியாமல் நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்கிறது,
உன்னையும் அறியாமல்.....