மலர்களும் அவளும்
மலர்களும் அவளும்
மலர்கள் பூக்கும் சாலை ஓரம் உன்னை கண்டேன்,
உன்னை பார்த்த நொடியில் உணர்தேன்,
மலர்களும் நீயும் பல வகையில் ஒத்து போகும் பண்புகள் உண்டு.
மலர்கள் பூக்கும் நேரத்தில் அழகிய ஒளி கதிர் பெருகும்,
நீ சிரிக்கும் நேரத்தில் அழகிய ஒளி மலரும்,
உலகில் இத்தனை அழகு இருந்தால் மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் இருக்கும் தானே.
மோட்டுகள் விரியும் தருணம் பூமியில் சூரியன் உதையாமாகும்,
உன் புன்சிரிப்பில் அனைவரின் மனமும் உற்சாகம் அடையும்,
மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெருகினால் வாழ்க்கை நிச்சயம் இன்பமையம்.
பல மலர்களை சாகுபடி செய்தென் நான்,
உன்னை மணந்து விலை மதிப்பில்லாத பிள்ளை செல்வங்களை பெற்றேன்,
என் வாழ்வின் மகிழ்ச்சி நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதில் தான்.
என்றும் மாறாத மலர்களின் வாசம் போல,
இன்றும் இருகிறது உன்னுடைய அன்பான சிரிப்பும் நல் பண்பும்,
மாசற்ற உலகம் வேண்டும் என்றால் மலர்களும் உன்னை போல அன்பான மக்களும் நிறைய வேண்டும்.
