விதை
விதை
சிறு விதையாக உன்னை விதைத்து,
அன்பென்னும் தண்ணீர் ஊற்றினேன்,
வேராக மனதினில் ஆழ பதிந்து விட்டாய்,
சின்ன சின்ன இலையாக உருமாறி,
என்னுள் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறாய்,
நீ வளரும் ஒவ்வொரு நாளும்,
என்னுள் எத்தனையோ மாற்றங்கள்,
எனக்கான உண்மையான நண்பன் நீ,
இன்று நீ வளர்ந்து பெரிய மரமாகி,
பூத்துக் குலுங்குவதை காணும் போது,
நான் உணரும் ஆத்மார்த்தமான மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்ல இயலாது,
தென்றலாய் நீ அரவணைக்கும் போது
தாயின் அணைப்பில் இருப்பதை போல் உணர வைக்கிறாய்,
எந்தன் மூச்சில் எப்போதும் நீ கலந்தே இருப்பாய்....
