பூ பூக்க என்ன தேவை?
பூ பூக்க என்ன தேவை?


பூ பூக்க என்ன தேவை?
ஒரு அண்டமே வேண்டும்.
அந்த அண்டம், ஒரு முறை வெடித்திருக்க வேண்டும்.
Galaxyகளும் வேண்டும்.
அதில் நட்சத்திரத்தை, பரப்பி விட்டிருக்க வேண்டும்.
எண்ணிலடங்கா விண்மீன்களுள், கதிரவனும் இருந்திருக்க வேண்டும்.
மறுமுறை வெடிப்பு, இம்முறை கதிரவன்.
வெடித்த சூரியன், தூசியை பரவ விட, அதில் ஒரு தூசி, பூமியாக இருக்க வேண்டும்.
பூமி ஒரு தூசி தான்.
பல சிறு தூசிகளை சேர்த்த பூமி, நிலவை மட்டும், தூரம் அனுப்பியிருக்க வேண்டும்.
பூமியில் அந்த நாெடி வரை நீரில்லை.
பல விண்கற்கள் மோத வந்திறங்கியது நீர்.
ஆமாம், முதல் வந்தேறி நீர் தான்.
பின்னர் பூமியில் பல பருவ மாற்றம்,
அதில் ஒன்று Ozone கூறை அமைப்பது.
இவை எல்லாம் நடப்பது, ஒரு பூவை காக்க தான்.
நிலம், அதில் மரம், பெரிய மரம், மரத்தில் சிறிய பூ.
இந்த பூ பூக்க, நாம் காத்திருக்கும் காலம். இந்த அண்டத்தின் ஆயுள் காலம்.
ஒரு அண்டமே காத்திருக்கும்... காத்திருக்க வேண்டும். ஒரு சிறு பூ பூக்க.
உன் பிறப்பு, இறப்பு, சிரிப்பு, அழுகை, கோபம், ஏமாற்றம், ஏக்கம், காமம், காதல் ... எல்லாம் அந்த பூ தான்.
உனக்காக காத்திருக்கும் இந்த அண்டம்.
எல்லாம் சரி., ஏன் அந்த பூ பூக்க வேண்டும்?