STORYMIRROR

Chidambranathan N

Romance

3  

Chidambranathan N

Romance

பூவினைப் போன்ற காதல் உணர்வுகளின் உச்சம்

பூவினைப் போன்ற காதல் உணர்வுகளின் உச்சம்

1 min
408

பூந்தோட்டத்தில் காணப்படுகின்ற பூக்களின் நறுமணம் போன்ற நம் காதலின் உச்சம்!

பூவினைப் போன்ற மென்மையான உணர்வுடைய உன்னை ஆரத்தழுவி!

பூரித்துப் போய் உன் மார்புதனில் முகம் புதைத்து!

பூவினை உன் மென்மையான கரத்தால் உன் கருங்கூந்தலில் சூடி!

பூவினைப் போன்ற அழகிய கண்களால் உணர்ச்சி பீரிட்டு இடை ஆடை நழுவவிட்டு!

பூக்கோலம் விளையாடிய உன் கண்களின் இமைகள் இரண்டும் மூடி!

பூ வண்டில் எடுத்த தேனை என் இதழ்களை இழந்து விட்டு!

பூவின் படத்தினை உன் கால்விரலில் கோலமிட்டு!

பூதாகரமாக நமது காமத்தின் இளமையை எரியவிட்டு!

பூனை போன்ற மெல்லிய சுவாசத்தில் காதல் சூடு எற்றி!

பூமியின் மண் வாசனையைப் போன்ற நமது வியர்வையில் குளித்து!

பூந்தோட்டத்தில் அமர்ந்து இருக்கும் ஒரு சிறு வினாடியில் உலகம் மறந்து!

பூவினைச் சூடி அதில் வரும் இனிமையான வாசத்தில் என்னை உன்னிடம் புதையவிட்டு!

பூவிலிருந்து கிடைக்கும் தேனின் சுவையினைப் போன்ற காதலின் உச்சம் கண்டு களித்தேனே!



Rate this content
Log in

Similar tamil poem from Romance