STORYMIRROR

Sreedhar Ramasamy

Fantasy

4  

Sreedhar Ramasamy

Fantasy

தூசி விழி மேல் காதல் கொண்ட கதை

தூசி விழி மேல் காதல் கொண்ட கதை

1 min
184

மண்ணை காக்க, தண்ணீர் இல்லாத ஆற்றில்.

மனிதன் கடத்திய மணல், தூசியாக மாற.

தனித்து, காய்ந்து, மெலிந்த

அந்த தூசி, தன் நிலத்தில்! ஆற்றுப்படுகையில், சேர... ஏங்கி மிதந்து வந்தது.

நீர் துளி பட்டால், நிலம் சேரலாம் என்று இருக்க.

அமில சாரல் பட்டு, தூசிகள் சில தரையிறங்கியது.

பயந்த நம் தூசி, மிதந்து தப்பியது.

மழைக்கு ஏங்கும் நம் தூசி!! உயிர் வளர்த்த உழவனை கண்டது.

தனித்து, காய்ந்து, மெலிந்த, உழவன் சிரிக்க மறந்தான்.

மழைநீர் நனைக்க மறந்த நிலத்தை, 

என் உழவன் கண்ணீர் நனைப்பதை கண்ட

தூசி ...

விழி மேல் காதல் கொண்டது!!!




Rate this content
Log in

Similar tamil poem from Fantasy