STORYMIRROR

நிலவின் தோழி கனி

Abstract Romance Fantasy

4  

நிலவின் தோழி கனி

Abstract Romance Fantasy

என் இதயத்தில் மழைத்துளி

என் இதயத்தில் மழைத்துளி

1 min
285

தட்டான் பூச்சிகள்

மழையின் வருகைக்காக

அங்கும் இங்கும் உலாவி

வானில் பறப்பது போல

என்னவளின் வருகைக்காக

மனதால் அலைந்து திரிந்து

ஒவ்வொரு நொடியும் நானும்

உன் உருவமில்லா நிழலின்

நினைவில் வாழ்வை

கற்பனையில் கழிக்கிறேனே!!!

வானத்தில் பொழியும் மழைத்துளி

இந்த பூமியை நனைய வைப்பது போல...

உன் காதலின் ஒவ்வொரு அன்புத் துளியும்

என் மனதில் விழுந்து... 

அதில் என்னுள்ளம் பூரித்து...

மனதிற்குள் பூப்பூக்க செய்கிறதே...

காதல் சாரலாய் என் உள்ளத்தை கரைத்தவளே...

நீ என் வாழ்வில் சூறாவளியாக வந்து...

உன் காதலால் எனை பித்து பிடிக்க செய்தவளே...

உன் அன்பு மழையில் எனை மூழ்க வைத்தவளே...

மழை சாரலில் நான் 

உன் செவ்விதழ் தீண்டுகையில்

என் பேச்சற்ற நா கூட உன்னிடம்

மழையின் ஓசையோடு 

மௌன மொழியில் 

காதல் ரகசியம் பேசுகிறதே...

மழையோடு வீசும் இளங்காற்றை போல...

என்னை காதலோடு அணைத்து...

அந்த அணைப்பினிலே எனை திணற வைப்பாயடி...

மழையோடு விளையாடும் உன் குழந்தை தனத்தில் 

எனை மயக்கி வைப்பவளே...

நீ துள்ளி ஆடும் அழகினை காண

என் கண்கள் தவம் கிடக்கிறதே..‌‌

காலையில் பூத்த புதுமலர் போல...

உன் வதனத்தில் மாரி துளிகள் நனைத்திருக்க

என் ஆண்மையை தூண்டி விடுகிறாயே...

உன் கொள்ளை அழகில் பார்த்து

தண்ணீர் இல்லா மீனை போல

திணறிக் கொண்டு இருக்கிறேனே...

பாலை வனத்தில் மழை பொழிந்து

அதை சோலை வனமாக மாறியது...

அதுபோல...

நீ என் வாழ்வில் புகுந்து...

என்னை ஒவ்வொரு நிமிடமும்...

காதல் எனும் இன்பத்தில் இருக்க...

நித்திமும் உன் நினைவில் வாழ்கிறேனே...


Rate this content
Log in

Similar tamil poem from Abstract