STORYMIRROR

Sowmiya Dhatchan

Classics Fantasy Inspirational

4  

Sowmiya Dhatchan

Classics Fantasy Inspirational

சுயநலமற்ற கண்கண்ட தெய்வம் -தாய் (SUPER MOM)

சுயநலமற்ற கண்கண்ட தெய்வம் -தாய் (SUPER MOM)

1 min
400


தனது தாயின் அரண்மனை

வாயில் தானாக திறந்ததால்

ஏனோ?

வலியை கொடுத்து வெளியே

வந்ததால் தனது தாய் வலியை

பொறுக்காது அழுதவள்,

என்பதை அன்றே உணர்ந்தவள்...!


புரண்டு, உருண்டு, சுருண்டு 

கிடந்தவளை நடக்க

வைத்தவள் அவளது தாய்...!


பள்ளி சென்றாள்

முகம் பாரா;

முகவரி கேளா;

புது சொந்தங்களை

ஏற்கனவே பழவியவள் போல்

உயிராய் ஏற்றவளேம் அவளே!

பெண்ணல்லவா? 


பருவம் எய்தினால்

புன்முறுவலில் வெட்கமும்

எட்டிப் பார்க்கத்தான்

எண்ணியதே

என் தாயவளை...!


கல்லூரி வாழ்வை ஆரம்பித்தாள்

விடுதி தாயை அனுகி

அனைத்தையும் கற்றவளாய்!

கற்றறிந்த கலைமகளை

கரங்களால் வணங்கி;

உள்ளத்தால் அர்ச்சனை 

செய்தே...!


வேலை எனும் சோலைவனத்தில்

தனக்கென பெயரை நிலைநிறுத்தினாள்

குடும்ப வறுமையை போக்கி...!


மாங்கல்ய மாலை அணிந்து

மணக்கோலம் பூண்டாள்...!

கணவரை கண்ணுள் வைத்து தாங்கியவள்;

என்னை உயிர் நாடியில் சுமந்து

ஈரைந்து மாதம் முழுவதும்

எனை மட்டுமே உயிர் மூச்சாய்

நேசித்தவள்...!


மனமின்றி என்னை பூமித்தாய்

மடியில் தவழ விட்டாள்...!

ஊரறிய மட்டுமின்றி

உலகே வியக்க என்னை கொஞ்சினாள்...!


அவளுக்கான அனைத்தையும்

எனக்காக விட்டுவிட்டு

என்னை மட்டுமே;

எனக்காக மட்டுமே;

என்னிடம் மட்டுமே;

அனைத்து உணர்ச்சிகளையும்

விட்டுக்கொடுத்தாள்...!


என்னையும் மிகச்சிறப்பாக

வளர்த்துக்கொண்டு 

இருக்கிறாள்!


அவளது 

அன்பிற்கும்;

ஆறுதலுக்கும்;

இன்பத்திற்கும்;

ஈகைக்கும்;

உறுதிக்கும்;

ஊக்கத்திற்கும்;

எளிமைக்கும்;

ஏழ்மைக்கும்;

ஐயத்திற்கும்;

ஒப்புறவிற்கும்;

ஓதுவதற்கும்;

என்ன கைம்மாறு செய்வேனோ

என அறியாது...!

பட்டக் கடனை அடைக்க இயலாது

பார்போற்றும் "தாய்" எனும் "நெருப்பை" 

பற்றி கவி எழுதும்

அவளால் உருவாக்கப்பட்ட

"தீப்பொறியின்"

அனல் இக்கவியே..!

    

       



Rate this content
Log in

Similar tamil poem from Classics