தடுப்பூசியே நல்வாழ்விற்கு வழி
தடுப்பூசியே நல்வாழ்விற்கு வழி
களப்பணியாளர்களும்
கண்டு நடுங்கும்படி
செய்தாயே...!
எச்சில் திவளைகளால்
அடுத்தவர் நுரையீரல்
அடைந்தாயே...!
தன்கையே தனக்கு எதிரியானதே...!
முகக்கவசம் முன்வந்து
ஒட்டிக்கொண்டதே...!
ஊரெல்லாம் பயணித்து
எம் உயிர் எடுக்கும்
மரணமாய் எங்களை
அணுகினாயோ?
மருத்துவமனைகளுள்
படுக்கைகள் இன்றி
ஆம்புலன்ஸ்களிலும்
மரத்தடியிலும் மனித உயிர் மூச்சுக்காக திணறிக்கொண்டு
இருக்கின்றனவே...!
ஆட்டோக்களும் ஆக்ஸிஜன்
பூட்டிய மினி ஆம்புலஸ் ஆகினவே...!
முன்பு
சிட்டுக்குருவி குடும்பத்தை
அதன் வீட்டிலிருந்து
பிரிந்ததால்
ஏனோ?
இன்று அவரவர்
குடும்பத்தை இழந்து
வாடுகின்றனர்...!
பள்ளிக்குழந்தைகள் முதல்
ஆய்வியல் நிறைஞர்
மாணவர்கள் வரை
எதிர்காலத்தை எண்ணி
கவலையில் மூழ்கியுள்ளனர்...!
தினக்கூலி மக்களோ
இருவேலை ஒரு ஜான்
வயிற்றிற்கே அல்லல்டுகின்றனர்...!
மருத்துவத்துரை, காவல்துறை, செய்தித்துறை,
சுகாதார மற்றும் அனைத்து துறை சார்ந்தவர்களும்
இன்னலில் செயவதறியாது
வாடுகின்றனர்...!
கோவில்கள் மூடப்பட்டாலும்
தெய்வங்கள் உயிரைக் காக்க
ஒவ்வொரு நொடியும் போராடுகின்றனவே...!
வாயில்லா ஜீவன்கள்
பசிறினால் தெருவெங்கும்
சுற்றி அலைகின்றனவே...!
அனைவரும் குடும்பத்துடன்
நேரத்தை செலவிடவே!
மனிதநேயத்தை உணரவே!
அண்டை, அயலார்க்கு
கருணை காட்டிடவே!
காலம் வகுத்த
வழியல்லவா இது?
இதோ வந்து விட்டது
கோவாக்ஸின் எனும்
தடுப்பூசி உனது கதையை முடிக்க...!
அனைவரும் தடுப்பூசி
போடவேண்டும்;
ஆடி, பாடி, கொண்டாடுவோம்
அவரவர் வீட்டிலிருந்தே...!
கொரோனாவை அழிப்போம்;
மனிதம் போற்றுவோம்;
ஒற்றுமையை கடைபிப்போம்;
உயிரைக் காப்போம்;
வாழ்க பாரதம்...!