STORYMIRROR

Chidambranathan N

Classics Fantasy Inspirational

4  

Chidambranathan N

Classics Fantasy Inspirational

தீய எண்ணங்களைத் தவிர்த்து விடுவோம்

தீய எண்ணங்களைத் தவிர்த்து விடுவோம்

1 min
349

இனக்கவர்ச்சி எண்ணங்களுக்காக உண்மையற்றக் காதல் செய்யும் செயல்களை நாம் தவிர்த்து விடுவோம்! 

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு நண்பர்களுடன் நட்புப் பாராட்டும் பண்புகளைத் தவிர்த்து விடுவோம்! 

எளிய மக்களிடம் அன்புடனும் நட்புடனும் பழகி நமது மனதில் தோன்றும் ஏற்றத்தாழ்வு எண்ணங்களைத் தவிர்த்து விடுவோம்! 

கருமை நிறம் தமிழர்களின் நிறம் என்று பெருமிதம் கொண்டு தேவையற்றத் தாழ்வு மனப்பான்மை எண்ணங்களைத் தவிர்த்து விடுவோம்! 

தகுதியுள்ள அனைத்துப் பெண்களையும் பணிக்குச் சென்று பொருள் ஈட்ட வைத்துக் குடும்ப வருமானத்தினை உயர வைத்துப் பெண் அடிமை எண்ணங்களைத் தவிர்த்து விடுவோம்!

நமது முன்னோர் நமக்குக் கற்றுத் தந்த ஆணாதிக்க எண்ணங்களைத் தவிர்த்து விடுவோம்!

குழந்தைத் தொழிலாளர் முறையினை இந்தச் சமுதாயத்திலிருந்து ஒழித்திடப் பாடுபட்டு அதனை முற்றிலும் தவிர்த்திடப் பாடுபடுவோம்!

சாதிச் சமயக் கருத்துக்களைப் பொதுவெளியில் பேசுவதனைத் தவிர்த்து விடுவோம்! 

சர்ச்சைக்குரிய தீய எண்ணங்களை நமது மனதிலிருந்து விலக்கி அவற்றினை முற்றிலும் தவிர்த்து விடுவோம்!

நம்முடன் இருந்துகொண்டே நம்மை இழிவு படுத்தும் மனிதர்களிடம் நட்பு பாராட்டாமல் தவிர்த்து விடுவோம்! 

நாம் நமது வாழ்வில் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டு எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து விடுவோம்!

நமக்கு அதிக மன அழுத்தத்தினைக் கொடுக்கும் தேவையற்ற எண்ணங்களை முற்றிலும் தவிர்த்து விடுவோம்!

நேர்மையான வாழ்க்கை முறையினை மட்டுமே நாம் வாழ்ந்து கொண்டு நேர்மையற்ற வாழ்க்கை முறையினைத் தவிர்த்து விடுவோம்!

நமக்குள் இயற்கையாக இருக்கும் தீய எண்ணங்களைத் தவிர்த்து விடுவோம்!

பெற்றோர்களிடம் நல்ல அறிவுரைகளைப் பெற்று அவர்களை உதாசீனம் செய்யாமல் தவிர்த்து விடுவோம்!

பெண்ணுரிமை மற்றும் சமூக நீதிக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு தேவையற்ற மூட நம்பிக்கைகளைத் தவிர்த்து விடுவோம்!

தற்சார்பு குடும்பப் பொருளாதாரத்தினை ஆராய்ந்து அதனை நமது குடும்பத்தில் வெற்றிகரமாகச் செயல்படுத்தி நமக்கு ஒவ்வாத குடும்பப் பொருளாதார முறைகளைத் தவிர்த்து விடுவோம்!


Rate this content
Log in

Similar tamil poem from Classics