செயற்கை விவசாயம்
செயற்கை விவசாயம்
அதிக நார்ச்சத்துக் களை கொண்ட பாரம்பரிய நெல் ரகங்களை அழிவின் விளிம்பில் கொண்டு சேர்த்தார்கள்!
செயற்கை முறையில் உருவாக்கப் பட்ட குட்டை ரக நெல் விதைகளைக் கொடுத்துப் பயிரிட ஊக்கப் படுத்தினார்கள்!
பாரம்பரியப் பழக்க வழக்கங்களான நெற்பயிரின் தானியங்களைப் பொதுமக்களுக்கு என்றும் நெற்பயிரின் நடுப்பகுதியினைக் கால் நடைகளுக்கு என்றும் நெற்பயிரின் வேர்ப்பகுதியினை விவசாய நிலத்திற்கான உரமாகப் பயன்படுத்துகின்ற பழக்க வழக்கங்களை மறக்கச் செய்தார்கள்!
பெருமைக்குரிய பாரம்பரிய விவசாய முறைகளைச் சிறிது சிறிதாக மறக்கச் செய்திடத்தான் செயற்கை விவசாயக் கருத்தியலை விவசாயிகளின் ஆழ் மனதிலே பதியச் செய்தார்கள்!
விவசாய நிலத்தில் உள்ள பயிர்களில் உள்ள பூச்சிகளையும் புழுக்களையும் கட்டுப் படுத்திட விவசாயிகள் இலவசமாகப் பயன்படுத்தும் நஞ்சில்லாத பாரம்பரிய விவசாய முறைகளை எதிர்த்தார்கள்!
பாரம்பரிய இயற்கை விவசாயத்திற்கு மாற்றாக நச்சுத் தன்மை உடையச் செயற்கைப் பூச்சி மருந்துகளைப் பணம் கொடுத்து வாங
்கித் தொடர்ச்சியாகப் பயன்படுத்திட வேண்டும் என்று பரப்புரைச் செய்தார்கள்!
இலவசமாகக் கிடைக்கின்ற கால் நடைக் கழிவுகளை மட்டுமே உரமாகப் பயன்படுத்த வேண்டும் என்கின்ற பாரம்பரியக் கருத்தியலினை எதிர்த்தார்கள்!
செயற்கை உரங்களைத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்து அவற்றினை விவசாயிகளைப் பணம் கொடுத்து வாங்க வைத்துப் பயன்படுத்த வேண்டும் என்று தீவிரமாக விளம்பரம் செய்தார்கள்!
விவசாயிகளுக்குச் செயற்கை உரங்களையும் நச்சுத் தன்மை உடையப் பூச்சி மருந்துகளையும் அளித்து விவசாய நிலத்தின் ஊட்டச் சத்துக்களைக் குறைத்துக் கவலை கொள்ளச் செய்தார்கள்!
விவசாயிகளைச் செயற்கை விதை நெல்லையும் நச்சுத் தன்மை உடையப் பூச்சி மருந்துகளையும் செயற்கை உரங்களையும் பணம் கொடுத்து வாங்க வைத்து! விவசாயிகளின் விவசாய வருமானத்தின் அளவினைக் குறைந்து போகச் செய்தார்கள்!
இயற்கை விவசாயத்திற்கு மாறிய சில விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் பெருமளவுப் பணத்தினைச் சேமிக்க முடியும் என்கின்ற உண்மையினை உணர்ந்து கொண்டார்கள்!