STORYMIRROR

Fathima Jabbrin

Abstract Romance Fantasy

4  

Fathima Jabbrin

Abstract Romance Fantasy

என்றும் உன் காதலியாக!

என்றும் உன் காதலியாக!

1 min
344

நண்பனாக அறிமுகமாகி

சிலவற்றைப் பகிர்ந்துகொண்டு

இன்றோ 

என்னவனாக மாறி

வாழ்க்கையைப் பகிர்வாய்

என்னோடு!


சண்டைகள் சில

சமாதானங்கள் பல...


காயப்படுத்தினாலும் 

உன் திகட்டா அன்பினால்

சரிசெய்வாய் - அது அழகு!

அன்பான அணைப்பும்

பொன்னான இதழ் இணைப்பும்

என்னிடம் நீ 

கேட்கும் விதம் அழகு!

அதை நான் தர மறுக்கும்போதோ

சிறு பிள்ளையைப்போல் நீ

ஏங்கும் விதம் அழகு!


கொஞ்சம் அன்பு கொஞ்சம் அன்பு என

ஏங்கும் என் இதயத்திற்கு

போதும் போதும் என

என் நெஞ்சம் கெஞ்சுமளவிற்குக்

காதலைத் தருபவனே!

என் வாழ்வில் - நீ 

எதிர்பாராமல் வந்தாயா? - அல்லது

நான் எதிர்பார்த்தபடி இருந்ததால் வந்தாயா? - என ௭ன் புத்தி கேட்டபோது 

௭ன் இதயம் கூறிய பதில் :

நான் எதிர்பார்த்தபடி இருந்ததால்

௭ன் வாழ்வில் 

எதிர்பாராமல் வந்த

பொக்கிஷமென்று!


எத்தனை துன்பம் வந்தாலும்

கைவிடாமல் ௭ன்னை

உன்னவளாக மாற்ற

நினைக்கும் உன் கைகோர்த்து

வாழ்நாள் முழுவதும்

வாழ ஆசைப்படுகிறேன்...

மனைவியாக மட்டுமல்ல

என்றும் உன் காதலியாக!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract