STORYMIRROR

Fathima Jabbrin

Abstract Inspirational

4  

Fathima Jabbrin

Abstract Inspirational

யார் அவள்?

யார் அவள்?

1 min
411

பெண் - யார் அவள்?

கருவிலிருந்து கல்லறைக்குச் செல்லும்வரை

அவளின் வழிகள்தான் எத்தனை?

அதில் வலிகளும்தான் எத்தனை?


அவளுக்கோ சிறிய ஏமாற்றம்

மழலையில் மனம்போனபோக்கில்

மழையில் நனைய ஆசைப்படும்போது

வேண்டாமென்ற சிறு தடை!


அவளுக்கோ சிறிய வலி

குமரியில் குதூகலமாக

குதித்தோடி விளையாட எண்ணும்போது

பருவமடைதல் எனும் தடை!


அவளுக்கோ பெரிய ஏமாற்றம்

படித்துப் பட்டம்பெற்று

பாரைச்சுற்றிப் பறக்க ஆசைப்படும்போது

திருமணம் எனும் தடை!


அவளுக்கோ பெரிய வலி

கருவறையில் தன் கருவைச் சுமக்கும்போதுகூட

பெற்றது பெண்ணானால்? - என்ற 

கேள்வியைக் கேட்கும்போது,

தன் மழலையை மகிழ்ச்சியாய்த்

தடையின்றிப் பெற்றெடுப்பதிலும் தடை!


தடை தடை தடை - வாழ்வில்

எங்கும் எதிலும் தடை.

எனினும் இத்தடைகளால் தளர்ந்துவிடாமல்

அத்தடைகளையும் உடைப்பவள் - பெண்

தன்னைச் சிறகொடித்து சிதற வீசினாலும்

விண்ணில் உயர்ந்து பறக்க 

தன் முழுமுயற்சியால் முன்வருபவள் - பெண்!


தான் தரித்திரம் அல்ல

நல்ல சரித்திரம் படைப்பவள் 

என நிரூபிப்பவள் - பெண்

தன் வேதனைகளையும்

சாதனைகளாக மாற்றுபவள் - பெண்!


அவள் வெறும் பெண்மணி மட்டுமல்ல - நம்

நாட்டின் கண்மணியும்கூட!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract