இயற்கையும் ஆசிரியனோ
இயற்கையும் ஆசிரியனோ
கற்றேன் விடாமுயற்சியை
௭த்தனை முறை பாறையில் மோதினாலும் - அவை
அத்தனையும் தன் தோல்வியென ஒற்றுக்கொள்ளாது
மீண்டும் சீறியெழும்
கடலின் அலைகளிடமிருந்து!
கற்றேன் தியாகமனப்பான்மையை
மனிதனைத் - தான் சுடுபட்டு
சுட்டெரிக்கும் சூரியனிடமிருந்து விடுபடுத்திய
நிழல்தரும் மரங்களிடமிருந்து!
கற்றேன் அன்பை
எங்கே எங்கே என தேடும்போது
இங்கே உள்ளேனென்று
தாயைப்போல் தழுவிக்கொள்ளும்
கையில் சிக்கா காற்றிடமிருந்து!
கற்றேன் தன்னம்பிக்கையை
மறைந்துபோனாலும் மறந்துபோகாமல்
மிஞ்சும் அழகில் கொஞ்சம் கொஞ்சமாய்
மீண்டும் வளர்வேனென்ற
வானின் நிலவிடமிருந்து!
கற்றேன் உதவும் மனப்பான்மையை
இருள் சூழ்ந்துக் கூடினாலும்
அருள் மழையைப் பொழிந்து
உயிர் வளர பயிர் வளரச்செய்யும்
நீல வானிடமிருந்து!
கற்றேன் மனவுறுதியை
தன்மேல் எறியப்பட்ட கழிவுகளை உதறி
தன் இலக்கின் வழியை நோக்கிச்செல்லும்
நீள நதிகளிடமிருந்து!
கற்றேன் கற்றேன்
வாயடைத்து வியந்தேன்
இயற்கையும் ஓர் அழகிய ஆசிரியனன்றோ?