காதல் கடிதம்
காதல் கடிதம்
கடிதம் எழுதினேன் முதன் முதலாய் என்னை முழுதாய் நம்பியவளுக்காக முதல் கடிதம் எழுதினேன்!
வேலையில்லாமல் வீதிகளில் நாடோடியாய் அலைந்தவனை
அலட்சியம் ஏதும் செய்யாமல் இவனே இலட்சியம் என்று அரவணைத்தவளுக்காக கடிதம் எழுதினேன்!
எத்தனை முறை அவள் சொல்லியும் கேட்காமல் அலைந்தவனை தனது சொக்க வைக்கும் அன்பினால் என்னை கட்டியவளுக்காய் கடிதம் எழுதினேன்!
தன் மீது மட்டுமே கவனம் செலுத்தும் சுயநலவாதிகள் மத்தியில் என்னை கவனித்து தனது கனிந்த வார்த்தைகளால் எமது தவறுகளை கலைந்தவளுக்காய் கடிதம் எழுதினேன்!
எதிர்பார முதல் முத்தத்தை தந்தவளுக்காய் முத்தான கடிதம் எழுதினேன்!
ஒழுங்கற்ற ஆடைகளையே தெனவட்டாய் அணிந்து திரிந்திவனை திருத்திய திருமகளுக்காக கடிதம் எழுதினேன்!பொறுப்புகளின்றி திரிந்தவனை
பொறுப்புள்ளவன் ஆக்கியவளுக்கு பொறுப்பாய் கடிதம் எழுதினேன்!
தேடல்களின்றி திரிந்தவனை எனது தேடலே நீ தான் என்றவளுக்காய் வார்த்தைகளைத்தேடி தேடி கடிதம் எழுதினேன்!
வார்த்தைகளைத்தேடி தேடி தோற்றுப்போய் உலகின் அழகே என்னவள் தான் என்று கடிதம் எழுதினேன்!

