அரிமா கவிஞன்
அரிமா கவிஞன்
காஞ்சிபுரத்து கவிமகன்
தந்தையை இழந்த தமிழ்த்தாயின் தலைமகன்
ஜோதிலஷ்மியின் ஜீன்மகன்
ஆதவனின் அன்புமகன்
யோகலஷ்மியின் யோகமகன்
பவாவின் பாசமிகு மகன்
சைலாஜாவின் செல்ல தம்பி
கலைத்துறையின் கலைமகன்
இயக்குனர் பாலுமகேந்திராவின் செல்ல பாலன்
சீமானின் வீறுநடை படத்தில் வீறுகொண்டு எழுந்தவன்
ஐந்து முறை விருதுகள் பெற்ற அஞ்சா நெஞ்சனிவன்
ஆயிராமாயிரம் புகழ்ச்சிகள் சூழ்ந்த போதும் வாசிப்பை உயிராய் நேசித்த உத்தமனிவன்
சில ஆயிரம் ஏமாற்றங்களை
கடந்த போதும் வஞ்ச புகழ்ச்சிபாடா
வான் மகன்
அகிம்சை வழியில் அரசியல் பேசிய அமைதியானவன்
அடைமொழிகள் சூழ் கவிஉலகில்
அடைமொழிகளின்றி
தனது கவிதைகளால் அடைமழையாய் பொழிந்த அரிமா கவிஞன் இவன்
எந்தன் அன்பு தோழனிவன்
உங்களின்
🙏தினேஷ்கண்ணா 🙏
