மண் - மழை - காதல்
மண் - மழை - காதல்
மண் பெண்ணவளை
காணக் காத்திருந்து
காலங்கள் உருண்டோட -
ஏக்கத்தோடே மழைக்காதலனும்
அலைமோத - காற்றும்
சமயத்தில் சிறு கிள்ளையென
அலைக்கழித்து ஆட்டம் காட்ட
வனிதையவளை நெருங்கும் நொடிதனில்
குடையெனும் தடை ஒன்றை
விதித்தவரும் எவரோ ?
தடைக்கல்லும் எமக்கிங்கே படிக்கல்லே !
குடைக் கம்பிகளூடே வழிந்தோடியே
கம்பி நுனியில் நின்றபடியே
பளீரென மின்னிச் சிரித்தே
துள்ளிக் குதித்து
நில காதலியை
முத்தமிட்டு - துள்ளாட்டமிட்டது
மழைத் துளி !