மழைக் காதல்
மழைக் காதல்


ஏகாந்தம் எங்கும் சூழ
முன்னந்திப் பொழுதும்
இருளாடை சூடியே
ஆவலுடன் காத்திருக்க
அந்த காத்திருப்பிற்கு
நானும் துணையானேன் !
காத்திருப்பும் கரைந்து
எதிர்பாரா நொடிதனில்
பிரசன்னமான மழைத்துளியில்
கரைந்தே போன என்னை
சட்டென உயிர்ப்பித்தது
ஜன்னலோர மழைச் சாரலாய் !
பட்டுத் தெறிக்கும்
மழைத்துளிகளை ஏந்திட
கரம் நீட்டி நிற்க
எனையறியா நொடிதனில்
எந்தன் மனம் களவாடியது
நாசி தொட்ட மண்மணம் !
கரத்தில் தஞ்சமடைந்தது
மழைத் துளியோ
உள்ளமும் கொள்ளை போனது
கண்ணிமைக்கும் நொடியோ -
எந்நாளும் வற்றா ஊற்றாய்
இந்த மழைக் காதல் !