தகவல்
தகவல்

1 min

23.1K
யாரையும் எதற்கும்
இழுக்கும் சக்தி
தகவலுக்கு உண்டு ....!!!
கிழக்கும் மேற்கும் முத்தம் இட
வடக்கும் தெற்கும் கட்டி தழுவ
அதிகாலையில் நாள் தோறும்
வாசல் எங்கும் எட்டி பார்க்கும்
துள்ளி வரும் சூரியன்
தூங்காமல் மிளிரும் நிலா
ஓடிக்கொண்டே இருக்கும் நேரம்
சுற்றியே திரியும் பூமி
நடக்காமல் நிற்கும் சிலைகள்
ஏமாற்றியே செல்லும் நிழல்
பறந்து பாயும் நெஞ்சமும்
தேடித்தான் அலைகிறது
சிறிய தகவலுக்கு மட்டும் .....!!!