புரிவதும் புரியாததும்
புரிவதும் புரியாததும்


கார்மேகம் மறைய வானம் மின்ன அதை காண என் இரு கண்கள் போதவில்லை,
ஏழு வண்ண வானவில் தோன்றி வானத்தின் கீரிடம் போல என்ன ஒரு அழகான காட்சி,
என் மனம் ஆச்சரியத்திலும் வியப்பிலும் திகைத்து நின்ற நொடி சற்றும் கவலை இன்றி இருந்தேன்.
எப்படி இது நிகழக்கூடும் ஒன்றுமே புரியவில்லை என்னக்கு அப்படி என்ன இருக்கு நம் பூமி மேல்,
இந்த அழகிய காட்சிகளை கண்டு மனதில் தோன்றிய ஆயிரம் வினாவுடன் பள்ளிக்கு சென்றேன்,
அறிவியல் வகுப்பு எப்போது என எண்ணி கொண்டே இருப்பேன் தினமும் நான்.
மேகம் விண்வெளி இவைபற்றி வகுப்பில் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டேன்,
பல கேள்வி என்னுள் தோன்றும் அதில் சில கேள்வி விடையின்றி இருக்கும் அப்படியே,
என்றேனும் ஒரு நாள் வானில் சென்று விண்வெளியை ஆராய கொள்ள ஆசை உதிக்க காரணம்.
ஆசையில் கனவும் லட்சியமும் கைகோர்த்து என்னை அறிவியல் கற்க செய்தது,
விண்ணில் பறக்கும் வீரன் ஆனேன் நானே இன்று விண்ணிலிருந்து பூமியை காண்கிறேன்,
இரு கண்கள் பார்க்கின்றன பூமியை; மனமோ பூமி இவ்வளவு அழகாக இருக்கு என எண்ணிக்கொண்டே வியந்தது.