நம் நினைவுகள்
நம் நினைவுகள்

1 min

332
காலங்கள் ஓடினாலும்
நம் நினைவுகள் மட்டும்
நம்மை விட்டு நீங்காது!..
நேரங்கள் தேய்ந்தாலும்
கடிகார முட்களாய்
நம்முள் சுற்றி கொண்டே இருக்கும்
நாம் பழகிய நாட்கள்
தேனை எடுக்க
பூக்களை சுற்றும்
தேனியை போல்
நட்பூக்களுக்காக கல்லூரியை
சுற்றிசுற்றி வந்தோம்
உறவே இல்லை என்றாலும்
உயிராக மாறினோம்
பிடிக்கவே இல்லை என்றாலும்
சகித்து கொண்டு வந்தோம்
நம் நட்புக்களுக்காக
உயிராய் பழகினோம்
மூன்று ஆண்டுகள்
மனமே இல்லாமல்
பிரிந்து செல்கிறோம்
நம் நினைவுகளுடன்....