எப்பொழுது
எப்பொழுது
1 min
517
காதல் ஒவியமாக
நீயும் நானும்
மாறுவது எப்பொழுது?
என்னில் நீயும்
உன்னில் நானும்
கரைவது எப்பொழுது?
நான்நீ என்பது
நாமாவது எப்பொழுது?
ஈருயிர் ஓர் உயிராவது
எப்பொழுது?
காலம் தெரியாமல்
நாம் இசைத்துக்
கொள்வது எப்பொழுது?
என் உலகமாய் நீ
மாறுவது எப்பொழுது?
உன் கெஞ்சல்களில்
என் கோபங்கள்
கரைவது எப்பொழுது?
உன் தீண்டலில் நான்
உறைவது எப்பொழுது?
என் கழுத்தின்
மாலையாக நீ
சேர்வது எப்பொழுது?
என் காதல் மழையில்
உன்னை நனைய வைப்பது
எப்பொழுது?
உன் உயிராக நானும்
என் உயிராக நீயும்
மாற போவது எப்பொழுது?
.
.
.
.
.