எப்படிப்பா இருக்கே
எப்படிப்பா இருக்கே
1 min
334
யாவரும் கேளிர் என்றும்
யாவரும் நலம் என்றும்
நலம் நலம் அறிய அவா என்றும்
சௌக்கியமா என்றும்
ஐயமிட்டு உண் என்றும்
தேர் கொடுத்தும்
மனுநீதி காத்தும்
தமிழ் வளர்த்தும்
வாழ்ந்தோம் வளர்ந்தோம்
இன்று வாட்சாப்பில்
பேசும் நாம் அடுத்தவர்
மனநிலை அறிய மறந்து அனைத்திற்கும்
அவசரமாக பதில் நோக்கி காத்திருக்கிறோம்
ஒரு வேளை அலைபேசி அழைத்தால்
மொக்கை போட அழைக்கிறார் என்கிறோம்
உடல்தளர்ந்து மறதி வந்து யாராவது
பேச மாட்டார்களா என்று வரும் காலம்
அதை மறந்து இன்றைய பொழுதைக் கழிக்கும்
அலை பேசி மனிதனே மனிதம் மறக்காதே
சங்கம் வளர்த்தத் தமிழைப் படி
ஆன்றோர் மொழியில் வாழப் பழகு
மனிதம் இன்றி எந்த செயற்க்கை அறிவும்
இறுதியில் மனிதனிடம் தோற்க்கும்
அவனுடைய போராட்ட குணத்திடம்..