என் மகளாய்
என் மகளாய்
வடித்தச் சோற்றைக் கண்ட எளியனாய்
இறையின் முழு உருவம் கண்ட பக்தனாய்
தமிழின் இனிமை சுவைத்த பாரதியாய்
கொடியை வருடிய மெல்லிய தென்றலாய்
கண்ணிற்கு இனிய பசுமைக் காட்சியாய்
மண்ணில் விளைந்து வளைந்த நெற்கதிராய்
முதுகில் விழும் அழகிய அருவியாய்
காலைப் பொழுதின் வீதியின் நிசப்தமாய்
வஞ்சப்புகழ்ச்சியில் திளைக்கும் மானிடராய்
மனதில் உதிர்த்த முதல் காதலாய்
வகுப்பில் கிடைத்த முதல் பாராட்டாய்
கடற்கரை மணலில் கால்களைப் புதைக்கும் நீராய்
கைகளில் ஏந்திய அவ்விநாடி
உன் மெல்லிய கரங்கள் பற்றினாய்
புவியில் இறங்கிய தேவதையே என் மகளானாய்