பார்த்தனின் கேள்வியாய்
பார்த்தனின் கேள்வியாய்
மண்ணைத் தின்று உலகைக் காண்பித்த ஐயனே
ஊழ்வினைப் பயனை உலகிற்கு உரைத்து
பார்த்தனின் கேள்வியாய் குருஷேத்திரத்தில் நின்றவனே
என்றும் நிலையான கீதையைப் பதிலாய் தந்து
உலகின் மறையைக் காப்பவனே
பால்ய பருவத்தின் நாயகனாய்
மத்தியமத்தின் வழிகாட்டியாய்
நடை தளரும் காலத்தில் நம்பிக்கையாய்
மானுட கர்மத்தையும் தர்மத்தையும்
உரைத்த சாரதியாய் எம்
உள்ளம் கவர்ந்த கோகுல பாலனை
எண்ணும் போது குசேலனின் செல்வம் போல்
மனம்நிறைந்து மகிழ்ச்சியில் திளைக்குமே...