STORYMIRROR

ANURADHA CHANDRASEKHAR

Abstract

4  

ANURADHA CHANDRASEKHAR

Abstract

நட்பு வளையம்

நட்பு வளையம்

1 min
407

யாஸ்மின் அழகுதான்

அவளை முதல்நாளில் ராகிங் செய்தனர்

என்னைக் செய்யவில்லை

நான் அழகில்லை என்று அர்த்தமில்லை

அவர்களுக்குத் தெரியவில்லை


மீனாட்சியும் அகப்பட்டுக் கொண்டாள்

அவள் மிகவும் துணிச்சல்காரி

எனக்கு துணிச்சல் போதாதென்று பொருளில்லை

நான் காட்டிக் கொள்ளவில்லை


ஷீலாவும் மாட்டிக் கொண்டாள்

அவள் வாயாடி

எனக்கும் பேசத் தெரியும்

 ஆனால் 

நான் பேசவில்லை (அவர்களிடம் பயம்)


முதல்நாள் நன்றாகத்தான் இருந்தது

மறுநாளிலிருந்துதான் தெரிந்தது

நான் அவர்கள் நட்பு வளையத்தைத் தவறவிட்டது


Rate this content
Log in

Similar tamil poem from Abstract