பெண்ணை சிதைக்காதே
பெண்ணை சிதைக்காதே
1 min
351
பச்ச குழந்தை அது
பால் வாசம் போகல
படு பாவி அவன்
படுக்க சுகம் தேடுறான்,
பல் போச்சே
அது பாவம் வயசான தேகம்
அவகிட்டயும் காட்டுறான் மோகம்?.
மக்கும் தேகம் மேல்
உன் மனசுல ஏன்
மக்காத ஆசை..?
அவளும் உயிர்தான்
ஊர் முழுக்க பேசுவாங்கனு
உள்ளுக்குள்ள வச்சு
புழுங்குறாளே😵,
வீட்டுக்கு சொன்னா கட்டிவச்சுடுவாங்களே,
வெளிய சொன்ன தப்பா பட்டம் கட்டிடுவாங்களேனு
உள்ளுக்குள்ள அழறா😢,
வேதனை அவளும் மனுஷிதான்
அவள் சதைமேல் கொண்ட ஆசை
உன் ரத்த உறவின் மேல் வராதா?
கற்பை கலங்க என்னும்
நீ,
நல்ல கற்பில்தா பிறந்தாயோ??
அவள் வேதனை கடவுளுக்கும்
புரியலையா?
கல்லாய் இருப்பதினால்
காதில் ஏரளயா ??..