பெண்மை ஒரு துணிவு
பெண்மை ஒரு துணிவு
முகமதி பாவை முத்தி வலியால் துடித்தனவே
முகம் மஞ்சள் அரைக்க தேதி ஒலித்தனவே !!
கோடி ஆசையில் மாமன் நெஞ்சம் தாய் மாமன் நெஞ்சம் குதித்தனவே,
செம்மையாய் வளர்ந்த தென்னங்கீற்று
வளைந்து சிறு குடிசையாய் மாறினவே!!
பாவை அவள் மங்கை ஆனதுமே
மங்களம் கொட்ட பெற்ற மனம் தேடினவே
மாப்பிள்ளையை தேடினவே !!
மதிகெட்டு மனம் கூடாது மங்கையை
கூடி ஒரு கூட்டுக்குள் அடைத்தனவே !
பெண்மை அறியா மூடன் அவன்
அவள் மூளையை முட்டு போட்டானே,
அடுப்பங்கரையில் ஒடுக்கி சட்டம் போட்டானே,
பெண் சக்தி அது,
சற்றும் அசராது - ஒடுக்கிய சட்டம்
அதை பெருக்கியே-
ஒரு மூலையில் கூட்டி,
சாதனை பல காட்டி,
பெண் பல உண்டே இந்நாட்டில் பல பெண்கள் உண்டே !!