தாய்மை
தாய்மை
கண்டேன் இரு கருநீல கோடு
கொண்டேன் காதல் என் கருவோடு
சொன்னேன் என் தாய்மையை என் கணவனோடு,
மகிழ்ச்சி !!
மனம் பறந்தது வெண் பஞ்சால்
செய்த இறக்கை போல,
கணிப்பால் திகைத்தது கரு
காய் தருமோ அல்லது காய் தர உதவுமோ!
ஐந்தாம் திங்கள் வலை பூட்ட
குடம் பாதி நிரம்பி அது
மீன் போல நீந்த விரும்பி
அசையும் உணர்வு அது அழகாய்!
எட்டாம் திங்கள் எட்டி உதைக்க
என்னங்க இவன் சுட்டி தாங்கல என கதைக்க
தாய்மை முழுமை பெற ஓடும் அது வழியாய்,
முடியும் திங்கள்
கொடியும் அறுந்து
உலகில் அடி எடுக்க நான்
பட்ட வலியின் அச்சம் ,
தாய்மை மகிழ்ச்சியின் உச்சம்!!...